அவளுக்கு மாராப்பும் அந்த தாவணிதான்
எனக்கு வீராப்பும் அதே தாவணிதான்...
ததும்பாத தங்கத்தை தாவணி தாளமிட்டது...
அந்த
தாவணியை உரசும் தென்கிழக்கு காற்றைகூட
நேசத்தோடு வெறுத்திருக்கிறேன்
மடிப்பு விழாத
மத்தாப்பு இடைக்குகூட
மத்தளம் கொட்டி
சம்பந்தம் பேசிய அந்த தாவணி...
அவள்
தாவணயில்
தலை முக்காடு போட்டாலும்
முத்தேவதையும் நிகரில்லார்...
தந்தனந்தான் பாடும் தமிழும்
கவிதை தரும் காற்றும்
மணிமுத்து கொண்ட கடலும்
அவள்
தாவணியின் தளும்பனுக்கு அடிமைதான்...!
அந்த
தாவணி தாமரையின்
தாலாட்டிற்கு தவம் புரியும்
தாவணிதாசன்
நான்.......................
No comments:
Post a Comment